27.1 C
New York
Tuesday, May 28, 2024

நன்மைகள், ஊட்டச்சத்து, சமையல் மற்றும் பல: HealthifyMe


தாமரை விதைகள்/மக்கானா ஒரு பாரம்பரிய இந்தியச் சிற்றுண்டி ஆகும். தாமரைச் செடி தேங்கி நிற்கும் வற்றாத நீர்நிலைகளில் வளரும்.

மக்கானா என்று வடநாட்டில் அழைக்கப்படும் தாமரை விதையானது பாரம்பரிய ஆசிய மருத்துவத்தில் சிறுநீரக பிரச்சனைகள், நாள்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் மண்ணீரலின் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்த பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதன் செறிவான மருத்துவ மதிப்புகள் மற்றும் தாது உள்ளடக்கம் காரணமாக இது உலகளவில் ஒரு சிறந்த உணவாக வேகமாக உருவாகி வருகிறது.

மக்கானா அல்லது தாமரை விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை ஆகும். அவை மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம், தியாமின், புரதம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் மிகவும் சக்திவாய்ந்த ஆதாரங்கள் ஆகும். வறுத்த மக்கானா அல்லது தாமரை விதைகள் ஒரு சிறந்த தேநீர் நேரச் சிற்றுண்டி ஆகும். வறுத்த மக்கானா அல்லது தாமரை விதைகள் குழந்தைகளுக்கான சரியான சிற்றுண்டி (டிபன்) விருப்பமாகும். இந்தியாவில், தாமரை விதைகளைப் பயன்படுத்திக் கீர், கறி, வெங்காயத் தயிப் பச்சடி எனப்படும் ரைதா மற்றும் கட்லெட் போன்ற உணவுகளையும் மக்கள் செய்கிறார்கள்.

தாமரை விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதற்கான பிரபலமான தேர்வாக அமைகிறது.

மக்கானா அல்லது தாமரை விதை உற்பத்தி

மக்கானா அல்லது தாமரை விதைகளை இந்தியாவில், பீகார் மாநிலம் அதிகம் உற்பத்தி செய்கிறது. தாமரை விதைகள் தாமரையிலிருந்து கிடைக்கின்றன. தாமரைச் செடியானது விதைக் காய்களை உருவாக்குகிறது. ஒவ்வொரு காய் 40 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் போது தோராயமாக 20 விதைகளைக் கொண்டுள்ளது. பின்னர் விதைகள் உலர்த்தப்பட்டு அதிக தீயில் வறுக்கப்படுகின்றன. வெளிப்புற கருப்பு ஓடு உடைந்து வெள்ளைப் பொரி (பஃப்ஸ்) வெளியே வரும். இந்த விதைகளைத்தான் தாமரை விதைகள்/மக்கானா க்கள் என்று அழைக்கிறோம்.

தாமரை விதையை மிகவும் பிரபலமாக்கியது எது?

மக்கானா அல்லது தாமரை விதைகள் அவற்றின் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக உள்ளன. பல பிரபலங்களும் தாமரை விதைகள் மற்றும் அவற்றை ஏன் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி பேசினர்.

மக்கானா அல்லது தாமரை விதையும் எளிதில் அணுகக்கூடியது. இது ஒரு சிறந்த சிற்றுண்டி விருப்பமாகும். நிறைவுற்ற கொழுப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவற்றில் குறைவாக இருப்பதால், சாப்பிடுவதற்கும் சிறந்த எடையை பராமரிப்பதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும். பல்பொருள் அங்காடிகளும் பல்வேறு வகையான மக்கானா எனப்படும் தாமரை விதைகளுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் உள்ளன. மக்கானா அல்லது தாமரை விதையானது விரதத்தின் போது உடனடி ஆற்றலை அதிகரிக்கச் சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.

‘தீவிரச் சைவ உணவு உண்பவர்களுக்கு’ இது நல்லதா?

வீகன் எனப்படும் தீவிரச் சைவ உணவு முறையானது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இப்போது வளர்ந்து வரும் ஒரு போக்கு ஆகும். இறைச்சி, பால், மீன், முட்டை போன்ற விலங்குகள் சார்ந்த உணவுப் பொருட்களைத் தீவிரச் சைவ உணவு முறை விலக்குகிறது.

தீவிரச் சைவ உணவு முறை தாவர அடிப்படையிலான உணவு என்றும் அழைக்கப்படுகிறது. தீவிரச் சைவ உணவு உண்பது ஒரு சிறந்த தேர்வாக இருந்தாலும், தீவிரச் சைவ உணவு உண்பவர்கள் தங்களின் தினசரி ஊட்டச்சத்து தேவைகளை விட குறைவாகவே இருப்பார்கள். இருப்பினும், அவர்களின் உணவில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் பெரும்பாலும் இழக்கப்படுகின்றன.

தீவிரச் சைவ உணவு முறை நீண்ட காலத்திற்கு குறைபாடு அடிப்படையிலான சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும். இங்கே தான் தாமரை விதைகள் வந்து தேவை-இடைவெளியை நிரப்ப முடியும்.

தாமரை விதைகளில் பாஸ்பரஸ், புரதம், கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளன. தீவிரச் சைவ உணவு உண்பவர்களுக்கு அவை சரியான தேர்வாகும். வாற்கோதுமை எனப்படும் பார்லி மற்றும் கோதுமை போன்ற பொதுவான பொருட்கள் போலல்லாமல், அவை பசையம் எனப்படும் மாப்புரதம் இல்லாதவை.

தீவிரச் சைவ உணவு உண்பவர்கள் சரியான சிற்றுண்டி விருப்பத்தைக் கண்டுபிடிக்க அடிக்கடி சுற்றிப் பார்க்க வேண்டி இருக்கும். அவர்களுக்கு, தாமரை விதையானது அவர்களின் அகால பசி வேதனைகளுக்கு ஒரு சிறந்த தீவிரச் சைவ சிற்றுண்டி. இந்தக் குறைந்த கலோரி கொட்டைகள் குற்ற உணர்வு இல்லாத உணவு நடவடிக்கைக்கு ஒரு சிறந்த வழி.

மக்கானா அல்லது தாமரை விதைகளின் ஊட்டச்சத்து உண்மைகள்

தாமரை விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வெளியேற்ற பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் பொட்டாசியம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மக்கானா அல்லது தாமரை விதைகளானது அளவில் சிறியதாக இருந்தாலும், அவை உங்களுக்கு ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகத் திகழ்கின்றன.

அவற்றை நீங்கள் சிற்றுண்டி செய்து சாப்பிடுவதால் நல்ல தோல், கட்டுப்படுத்தப்பட்ட எடை, நல்ல இதய ஆரோக்கியம், ஹார்மோன் சமநிலை மற்றும் பல போன்ற சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு மக்கானா அல்லது தாமரை விதைகளால் வழங்க முடியும்.

100 கிராம் தாமரை விதையில் பின்வருவன அடங்கும்:

  • கலோரிகள்: 347
  • புரதம்: 9.7 கிராம்
  • கொழுப்புகள்: 0.1 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 76.9 கிராம்
  • நார்ச்சத்து: 14.5 கிராம்
  • மொத்த கொழுப்புகள் (கொழுப்புகள்): 0.1 கிராம்
  • கால்சியம்: 60 மி.கி
  • இரும்பு: 1.4 மிகி

தாமரை விதையின் 11 நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்

1. சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

தாமரை விதைகள் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்திச் சிறுநீர் கழிப்பதைச் சீராக்கிச் சிறுநீரக ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன. அவை நச்சுத்தன்மையை நீக்கி மண்ணீரலைச் சுத்தப்படுத்தி உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகின்றன.

2. ஆரோக்கியமான இதயம்

தாமரை விதைகளில் மெக்னீசியம், புரதம், கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தாமரை விதையில் குறைந்த சோடியம் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன.

3. கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது

தாமரை விதைகள் நம் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் நீக்கி நச்சுத்தன்மையை நீக்குகின்றன. தாமரை விதைகள் கல்லீரலைச் சரியாகச் செயல்படவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

4. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது

தாமரை விதைகள் இரத்த சர்க்கரை அளவைச் சீராக்க உங்களுக்கு உதவுகிறது. அவை குறைந்த கலோரி மற்றும் கிளைசெமிக் குறியீடுகளைக் கொண்டுள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது.

5. எலும்புகளை வலுவாக்கும்

தாமரை விதையில் கால்சியம் நிறைந்துள்ளது. கால்சியம் எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளை உயவூட்டுகிறது. தாமரை விதைகள் எலும்பு சிதைவு நோய்களைத் தடுக்கின்றன. உங்கள் எலும்பின் ஆரோக்கியத்தையும் அடர்த்தியையும் மேம்படுத்த  நீங்கள் தாமரை விதையை தினமும் பாலுடன் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

6. எடைக் குறைப்பு

தாமரை விதையில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால், நீங்கள் உங்கள் சரியான எடையை நீங்கள் பராமரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மற்ற வறுத்த அல்லது பொட்டலாமாக்கப்பட்ட சிற்றுண்டி விருப்பங்களைப் போலல்லாமல், தாமரை விதை எடைப் பிரச்சினைகளை சேர்க்காது.

7. ஹார்மோன் சமநிலை

தாமரை விதைகள் உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. மாதவிடாயின் போது, தாமரை விதைகள் அந்த பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், அதிகப்படியான உணவைத் தடுக்கவும் உதவுகின்றன. மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளைக் கையாள்வதிலும் அவை உதவுகின்றன.

8. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது

சரியான செரிமானத்திற்காக நம் உடலுக்கு நார்ச்சத்து தேவைப்படுகிறது. தாமரை விதைகளில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது, இது செரிமான அமைப்பின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. நீங்கள் மலச்சிக்கல் அல்லது கடினமான மலம் போன்ற செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தினசரி உணவில் தாமரை விதைகளை நீங்கள் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

9. கருவுறுதலுக்கு நல்லது

தாமரை விதைகள் நம் உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது. அவை பெண் கருவுறுதலுக்கு சிறந்தவை மற்றும் அனைத்து பெண் இனப்பெருக்க உறுப்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கின்றன. தாமரை விதைகளை தவறாமல் உட்கொள்வது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

10. அழற்சியைத் தடுக்கிறது

தாமரை விதைகளில் ‘கேம்ப்ஃபெரால்’ என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தாமரை விதையின் வழக்கமான பயன்பாடு வீக்கத்தை குணப்படுத்த உதவும்.

11. முதுமையைத் தடுக்கிறது

தாமரை விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முன்னமே வயதாவதைத் தடுக்கிறது. தாமரை விதையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்டுகள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

சுருக்கம்

தாமரை விதைகள் என்றும் அழைக்கப்படும் மக்கானா, பல நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவை இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் சிறுநீர் கழிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கூடுதலாக, அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான இதயத்திற்கு பங்களிக்கின்றன. தாமரை விதை கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. தாமரை விதைகள் கால்சியம் உள்ளடக்கம் காரணமாக எலும்புகளை வலுப்படுத்துகின்றன. தாமரை விதைகள் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது. தாமரை விதைகள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கின்றன. தாமரை விதைகள் ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஆதரிக்கின்றன. தாமரை விதைகள் பெண் கருவுறுதலுக்கு நன்மை பயக்கும்.

தாமரை விதை/மக்கானாவைப் பயன்படுத்தி ஆரோக்கியமான மூன்று சமையல் வகைகள்

1. காரமான மக்கானா

அந்தத் திடீர்ப் பசியைத் திருப்திப்படுத்த இது ஒரு விரைவான மற்றும் நேரம் தேவையில்லாத செய்முறையாகும். இந்த செய்முறையின் அனைத்து பொருட்களும் எல்லா நேரங்களிலும் எங்கள் வீடுகளில் எளிதாகக் கிடைக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு இது ஒரு சிறந்த வழி.

தேவையான பொருட்கள்

  • தாமரை விதைகள் – 3 கிண்ணம்
  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • சுவைக்கு தேவையான அளவு உப்பு
  • சாட் மசாலா – 1 தேக்கரண்டி
  • குறுமிளகு – ½ தேக்கரண்டி
  • நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

  • சிறிது நெய்யைச் சூடாக்கி, தாமரை விதைகளைக் குறைந்த வெப்பத்தில் சுமார் 10-12 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் அதைத் தொடர்ந்து கிளறவும்.
  • அனைத்து மசாலாப் பொருட்களையும் அதனுடன் சேர்க்கவும். தீயை அணைக்கவும்.
  • தேவைப்பட்டால் மேலும் சாட் மசாலா சேர்க்கவும். அதை நன்றாகக் கலக்கவும் .
  • காற்று புகாத கொள்கலனில் அதனைச் சேமிக்கவும்

2. மக்கானா டிக்கி

தாமரை விதைகள் எதிலும் சுவையாக இருக்கும். உங்கள் விருந்தினருக்கு சேவை செய்ய இது ஒரு சரியான செய்முறையாகும். இது பாரம்பரிய ஆலு டிக்கிக்கு சரியான சுவையைச் சேர்க்கிறது. இது மிகவும் ஆரோக்கியமானது.

தேவையான பொருட்கள்

  • சமைத்து மசித்த நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கு – 2 
  • தாமரை விதைகள் – 1 கிண்ணம்
  • பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கியது
  • ஒன்றுக்கு இரண்டாக நசுக்கப்பட்ட வறுத்த வேர்க்கடலை – 2 தேக்கரண்டி 
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை – கைப்பிடி
  • பெருஞ்சீரகம் விதை தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி
  • சாட் மசாலா – 1 தேக்கரண்டி
  • சமையல் எண்ணெய் – 2-3 தேக்கரண்டி
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • தாமரை விதைகள் மிருதுவாக இருக்கும் வரை நெய்யில் வறுக்கவும். அவற்றை குருணை குருணையாக அரைக்கவும்.
  • குருணை குருணையாக அரைத்த தாமரை விதைகள், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மீதமுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
  • நன்றாக கலக்கு. உங்கள் சுவைக்கு தேவையான உப்பு மற்றும் மசாலா சேர்க்கவும்.
  • அதை வட்ட அல்லது கோள வடிவில் தட்டவடை போல உருவாக்கவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் அல்லது அடுப்பில் சுட்டுக்கொள்ளவும்.
  • கெட்ச்அப் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.

3. ஆரோக்கியமான மக்கானா சாட்

இது எண்ணெய் இல்லாத சாட்டின் ஆரோக்கியமான பதிப்பு. இது ஒரு விரைவான மற்றும் எளிதான செய்முறையாகும், அதை நீங்கள் 15 நிமிடங்களில் தயார் செய்யலாம். நீங்கள் விரும்பும் பொருட்களுடன் பரிசோதனை செய்து, இந்தச் செய்முறையின் உங்கள் சொந்த பதிப்பை உருவாக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • தாமரை விதைகள்
  • வெங்காயம் – 1 நறுக்கியது
  • சாதாரணத் தயிர் – 1 கிண்ணம்
  • மாதுளை விதைகள் – 1/2 கிண்ணம்
  • குறுமிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
  • உலர் திராட்சை – கைப்பிடி
  • வறுத்த சீரகப் பொடி – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை – கைப்பிடி – நறுக்கியது
  • எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • சுவைக்கு தேவையான அளவு உப்பு

செய்முறை

  • தாமரை விதைகளை 5-10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • தண்ணீரை பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
  • கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
  • அவற்றை நன்றாக கலக்கவும்.
  • இறுதியில் உலர்ந்த திராட்சை சேர்க்கவும்.

ஹெல்த்திபைமீயின் பரிந்துரைகள் (HealthifyMe)

தாமரை விதை ஒரு மொறுமொறுப்பான மகிழ்ச்சி தரும் உணவாகும். இது சிப்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தடுக்க நமது  கையிலேயே உள்ளது. தாமரை விதை இப்போது அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் கிடைக்கும் அதே வேளையில், அவற்றை சாதாரணமாக வாங்கி வீட்டில் வறுத்து சுவையூட்டுவதே அவற்றை உட்கொள்ள சிறந்த வழி. இதன் மூலம் சுவைக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களையும், தாமரை விதை/மக்கானாவை வறுக்க அல்லது மொறுமொறுப்பாக்கப் பயன்படுத்தப்படும் கொழுப்பு அல்லது எண்ணெயின் அளவையும் நாமே கட்டுப்படுத்தலாம்.

முடிவுரை

தாமரை விதைகள் ஒரு முழுமையான சிற்றுண்டி ஆகும். அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை ஆகும். தாமரை விதைகள் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இந்தச் சிறிய தாமரை விதைகள் ஒரு அற்புதமான சிற்றுண்டி விருப்பமாகும், மேலும் அந்த நண்பகல் பசியை பூர்த்தி செய்ய ஏற்றது. தாமரை விதைகள் சிறந்தவை என்றாலும், ஒவ்வாமை, இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். நீங்கள் உணர்திறன் வாய்ந்த வயிற்றைக் கொண்டவராக இருந்தால், தாமரை விதைகளை அதிகமாக உட்கொள்ளும்போது நீங்கள் சற்றுக் கவனமாக இருங்கள்.

இதை நினைவில் கொள்ளுங்கள்: விரைவாக உடல் எடையை குறைக்க நீங்கள் உங்கள் முக்கிய உணவுக்குப் பதிலாகத் தாமரை விதைகளை மாற்ற வேண்டாம். எடையைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது என்பது உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையைப் பொறுத்தது ஆகும். தாமரை விதைகளை சாப்பிடுங்கள். ஆனால் நீங்கள் அளவோடு அதை உண்ணுங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து நீங்கள் சுறுசுறுப்பாக இருங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கேள்வி: தாமரை விதையின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

பதில்: தாமரை விதைகள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. தாமரை விதைகளில் புரதம் நிறைந்துள்ளது. அவை நீண்ட காலத்திற்கு முழுமையின் உணர்வை ஊக்குவிக்கின்றன. மேலும் தாமரை விதையில் கலோரிகள் குறைவாக உள்ளது. இந்த கலவையானது சிற்றுண்டிக்கு ஏற்றதாக அமைகிறது. தாமரை விதையில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆரம்ப வயதை தடுக்கிறது. தாமரை விதைகள் ஹார்மோன் சமநிலையின்மையையும் சீராக்கும்.

கேள்வி: தாமரை விதையை எப்படி சேமிப்பது?

பதில்: தாமரை விதைகளை சேமிக்க காற்று புகாத கொள்கலன்கள் சிறந்தவை. அவை காற்று உள்ளே நுழைவதைத் தடுக்கின்றன, கொட்டைகளை புதியதாக வைத்திருக்கின்றன. குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் கொள்கலன்களை வைக்கவும். இந்த கொட்டைகளின் ஆயுளை நீட்டிக்க அவற்றை வறுத்தெடுப்பது ஒரு சிறந்த வழியாகும். வறுக்கப்பட்ட பருப்புகளை சேமிப்பதன் மூலம் அதன் சுவையை பாதுகாக்க முடியும். இது தாமரை விதைகள் விரைவில் அழுகுவதை தடுக்கிறது.

கேள்வி: தாமரை விதை செரிமானத்திற்கு உதவுமா?

பதில்: தாமரை விதைகளின் ஊட்டச்சத்து பட்டியலில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. இது வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்பைத் தடுக்கிறது. தாமரை விதையில் ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன, அவை செரிமானத்திற்கும் உதவுகின்றன. நீங்கள் தொடர்ந்து தாமரை விதைகளை உட்கொள்வது உணவு உட்கொள்வதையும் மலச்சிக்கலையும் தடுக்கலாம்.

கேள்வி: தாமரை விதை ஏன் மிகவும் பிரபலமானது?x

பதில்: தாமரை விதைகள் அதன் மகத்தான ஆரோக்கிய நன்மைகளால் அதன் பிரபலத்திற்கு கடன்பட்டுள்ளன. இது இந்தியாவில் ஒரு விரத உணவாக பிரபலமானது. தாமரை விதை பல உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருள். சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான தின்பண்டங்களில் இதுவும் ஒன்று. குறைந்த கலோரி மற்றும் அதிக புரத உள்ளடக்கம் கண்டுபிடிக்க ஒரு அரிய கலவையாகும். இது தவிர, பழங்கால மருத்துவ முறைகள் தாமரை விதைகளைப் பற்றி அதிகம் பேசுகின்றன.

கேள்வி: தாமரை விதை எடை குறைக்க உதவுமா?

பதில்: தாமரை விதைகள் குறைந்த கலோரிகள் மற்றும் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது. இந்த கலவையானது சிற்றுண்டிக்கான சிறந்த தேர்வாக அமைகிறது. புரத உள்ளடக்கம் நீண்ட காலத்திற்கு முழுமை உணர்வைத் தருகிறது மற்றும் அதிகப்படியான உணவைத் தடுக்கிறது. உங்கள் வழக்கமான உணவில் தாமரை விதைகளை சேர்ப்பதன் மூலம் எடை குறைவதை துரிதப்படுத்தலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com